ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பஞ்சாயத்து தலைவரின் கணவர் மீது புகார்

மனு அளிக்க வந்தவர்கள்
பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே சேளூர் செல்லப்பம்பாளையம் உள்ளது. சேளூர் செல்லப்பம்பாளைத்தின் ஊராட்சி மன்ற தலைவராக ரோகிணி இருந்து வருகிறார். இப்பகுதியில் அருந்ததியர் சமூக மக்கள் ஒரு பகுதியாக வாழ்ந்து வருகின்றனர்.
அப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடி தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ரோகிணியிடம் முறையிட்டுள்ளனர். அவர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் அவர்கள் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அவர் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தெறிவிதெதுள்ளார்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் குடி தண்ணீர் வராததை முறையிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ரோகிணியின் கணவர் சதீஸ் மின்மோட்டார் பழுதாகி விட்டன சரி செய்த பின்னர் தண்ணீர் விடப்படும் என தெரிவித்துள்ளார்.
அதை மறுத்த அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை மின் மோட்டார் இருக்கும் இடத்திற்கு உடன் அழைத்து சென்று மின் மோட்டார் பழுது இல்லை நன்றாக உள்ளது என காண்பித்துள்ளனர். இதை அறிந்த அலுவலர் அப்பகுதி மக்களுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சதீஸ் அங்கு இருந்தவர்களை பார்த்து தகாத வார்த்தையால் திட்டியும்,ஜாதி பெயரை கூரியும் திட்டியுள்ளார்.
மேலும் ஜாதி பெயரை கூரி நீங்கள் யாரும் ஓட்டுப்போட்டு என் மனைவி வெற்றி பெறவில்லை அதனால் உங்களுக்கு தண்ணீர் விட முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி இன்று தங்களை ஜாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் திட்டி தண்ணீர் விட மறுத்த சேளூர் செல்லப்பம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரோகிணியின் கணவர் சதீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளர்.
