பானிபூரி விற்றவரை தாக்கியவர் மீது புகார்
விருதுநகர் மாவட்டம் தேசபந்து மைதானத்தில் பானிபூரி விற்பனை செய்பவரிடம் தகராறு செய்து தாக்கியவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் கசாப்க்காரர் தெருவை சார்ந்தவர் திருவள்ளுவன் வயது 61. இவர் தேசபந்து மைதானத்தில் பாணிபூரி கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் கடைக்கு விருதுநகர் அய்யனார் நகரை சார்ந்த பொன் பாண்டி என்ற 20 வயது மதிக்க இளைஞர் அடிக்கடி வந்து பாணிப்பூரி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமலும் தகராறு ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருவள்ளுவன் கடைக்கு வந்த பொன் பாண்டி பானிபூரி கேட்டதாகவும் முதலில் காசு கொடுத்தால் தான் பானிபூரி தருவேன் என திருவள்ளுவன் கூறியதாகவும் இதனால் ஆக்கிரமடைந்தால் பொன் பாண்டி திருவள்ளுவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அருகில் இருப்பவர்கள் தடுத்ததை அடுத்து அங்கிருந்து சென்ற பொண்பண்டி திருவள்ளுவன் என்பவர் மீது கொலை மிரட்ட விடுவதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த திருவள்ளுவன் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story