பணியை செய்ய தவறியதாக தாசில்தார் மீது புகார்
பணியை செய்ய தவறியதாக தாசில்தார் மீது புகார்
பணியை செய்ய தவறியதாக கூறி இளையான்குடி தாசில்தார் மீது காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைகிராமம் பேருந்து நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்குக்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். உயர்நீதிமன்றமும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தமிழக அரசும் அரசாணை பிறப்பித்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் கோட்டாட்சியரும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இளையான்குடி தாசில்தார் கோபிநாத்க்கு உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் கோபிநாத் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அரசு பணியை செய்ய மறுத்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் ராதா கிருஷ்ணன் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story