தாராபுரத்தில் புளிய மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து புகார் மனு

தாராபுரத்தில் புளிய மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து புகார் மனு

மனு அளிப்பு 

தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் தனியார் பெட்ரோல் பங்க் அமைக்க பசுமையான 2 புளிய மரங்கள் வெட்டப்பட்டது கண்டித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தாராபுரம், பிப் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் சுயலாபத்திற்காக, தனியார் பெட்ரோல் பங்க் அமைக்க, பொள்ளாச்சி சாலையில் உள்ள மிகப்பெரிய பசுமையான புளிய மரங்கள் சமீபத்தில் வெட்டப்பட்டது உயிர்ப்புடன் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என்ற விதிமுறை பின்பற்றப்படும் நிலையில் தனியார் சுயலாபத்திற்காக இந்த மரங்கள் வெட்டப்பட்டதால் தாராபுரம் பகுதி மக்களிடையே மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

இந்த மரங்கள் எதற்காக வெட்டப்பட்டன எதன் அடிப்படையில் இதற்கு அனுமதி தரப்பட்டது என்ற கோரிக்கைகளை முன்வைத்து தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி அவர்களிடம் இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இந்த மனுவின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்ட பொறியாளர் தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து, செந்தில்குமார்,முத்தமிழ்வேந்தன், உதயகுமார், கருங்காலி வலசு முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்...

Tags

Next Story