நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை தாக்கிய பாமகவினர் மீது புகார்
செய்தியாளர்களை சந்தித்த நாதக நிர்வாகிகள்
நேற்று 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவின் போது கடத்தூர் ஊராட்சியில் உள்ள பச்சனம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பூத் எண் 78 ல் காளியப்பன் என்பவர் பூத் முகவராக பணியாற்றினார்.
இந்த நிலையில் பச்சனம்பட்டி காட்டுக்கொட்டாய் சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி சிவகுமார்,மற்றும் காளியப்பன் இடையே தகராறு ஏற்பட்டது. சிவகுமார் காளிப்பனுக்கு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பூத்திற்கு சென்றுள்ளனர்.
இதை பார்த்த அங்கிருந்த பாமக நிர்வாகிகள் சிவகுமார் ராமசாமி, சாந்தமூர்த்தி, ராஜா, சேட்டு ஆகியோர் நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்களை தாக்கி உள்ளனர். இது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிதர்மபுரி நகர காவல் நிலையத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.