திருமண செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை

திருமண செய்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை
X
பைல் படம்
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கேரள மாநிலம் கொல்லம் மையநாடு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளம் பெண் ஒருவர் குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்த அவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து வழங்கி வந்தார்.

அப்போது திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த பரத் கிருஷ்ணன் என்பவரிடம் கடந்த ஐந்து மாதமாக பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே இளம்பெண் கர்ப்பமானார். இதை அவர் பரத்கிருஷ்ணனிடம் தெரிவித்த போது, கருவை கலைத்து விடுமாறு கூறியுள்ளார். அந்த பெண் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணிடமிருந்து பரத் கிருஷ்ணன் ஒன்றரை லட்ச ரூபாய் வாங்கி உள்ளார். பின்னர் திருவனந்தபுரம் சென்ற அவர் அதன் பிறகு அந்த இளம் பெண்ணை தொடர்பு கொள்ளாமல், கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த அந்த இளம்பெண் பாரத் கிருஷ்ணன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் சம்பவம் நடந்த இடம் குமரி மாவட்டம் குழித்துறை என்பதால் திருவனந்தபுரம் போலீசார் குமரி மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு பரிந்துரை செய்தனர்.

இதைத்தொடர்ந்து பாரத் கிருஷ்ணன் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story