திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக புகார் !

திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக  புகார் !

  புகார்

விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக வேலூர் இப்ராஹிம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், பொதுமக்கள் அடையும் நன்மைகள் குறித்து பேசினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி உலக நம்பி என்பவர் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வேலூர் இப்ராஹிம் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலும் அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த புகார் கொடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story