ஊராட்சி தலைவர் போல் போலி கையெழுத்து போட்டு பணத்தை ஏமற்றியதாக புகார்

ஊராட்சி தலைவர் போல் போலி கையெழுத்து போட்டு பணத்தை ஏமற்றியதாக  புகார்

ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி ரமேஷ்

பால்நாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர், தனது கையெழுத்தை செலவின சீட்டில் போலியாக கையெழுத்து போட்டு மோசடி செய்த வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர் பால்நாங்குப்பம் ஊராட்சி தலைவராக உள்ளார். இந்த நிலையில் பால்நாங்குப்பம் பகுதிக்கு பதினைந்தாவது நிதி குழு மானியத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. அதற்கான தொகையை இரண்டாவது வார்டு உறுப்பினர் ஸ்ரீதர் மற்றும் ஐந்தாவது வார்டு உறுப்பினர் பிரபு ஆகியோர் நிதிக்குழு மானிய செலவினை சீட்டில் போலியாக ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி ரமேசின் கையெழுத்தை போட்டு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இதன் காரணமாக வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி ரமேஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார்.

Tags

Next Story