கொல்லங்கோடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக புகார்
கொல்லங்கோடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக புகார்
கொல்லங்கோடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதிக்குட்பட்ட ஊரம்பு, மேட விளாகம், கிராத்தூர் பகுதிகளில் தனியார் மது பார்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக புகர் எழுந்துள்ளது. அரசு விதிப்படி காலை 11 மணிக்கு தான் இந்த பார்கள் திறக்க வேண்டும். ஆனால் இங்கு காலை 4 மணி முதலே கடையை திறந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, வேலைக்கு செல்பவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. மது பிரியர்கள் காலை பொழுதே ரோட்டோரத்தில் இருந்து மது குடித்துவிட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர். ஆகவே அரசு விதிகளின்படி காலை 11 மணிக்கு முன்னர் பார்ரை திறக்க அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story