திமுக தலைவர் மீது முறைகேடு புகார் - திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திமுக தலைவர் மீது முறைகேடு புகார் - திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் 

கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், தி.மு.க., 11, அ.தி.மு.க., 3, ஒரு சுயேச்சை என். 15 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த,பேரூராட்சி தலைவர் லீலாராணி தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.அதில் சேர்ந்த, தி.மு.க.,வை துணை தலைவர் அமுதா தலைமையில் கவுன்சிலர்கள் முருகேசன், சுப்ரமணி, கவிதா, ராஜஸ்ரீ, நல்லதம்பி, பவுனாம்பாள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது மாதத்தில், 54 காசோலைகள் பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்ட போது பதில் அளிக்கவில்லை. தீர்மானம், ஒப்பந்த பணிகளை மேற்கொள்வதில்லை முறைகேடான குடிநீர் இணைப்பு குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை. தீர்மானம் குறித்து துணைத்தலைவர், கவுன்சிலர்களிடம் ஆலோசிப் பதில்லை. தன்னிச்சையாக தலைவி செயல்படுகிறார். கேட்வால்வு திருட்டைதடுக்க 'சிசிடிவி' பொருத்தும்படி கூறியும் நடவடிக்கை இல்லை. தலைவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

Tags

Next Story