பெரியார் பல்கலையில் முறைகேடு புகார்: பதிவாளரை கைது செய்ய தீவிரம்

பெரியார் பல்கலையில் முறைகேடு புகார்: பதிவாளரை கைது செய்ய தீவிரம்

சேலம் பெரியார் பல்கலை கழகம் 

பெரியார் பல்கலையில் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் பதிவாளரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த முறைகேடு வழக்கில் பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

சூரமங்கலம் பகுதியில் அவரது வீடு இருப்பதால் அவரது வீட்டை தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, பல்கலைக்கழக முறைகேடு விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராமன், உதவி பேராசிரியர்கள் சுப்பிரமணிய பாரதி, ஜெயக்குமார், நரேஷ்குமார் மற்றும் விருந்தினர் மாளிகை தினக்கூலி பணியாளர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேரும் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அவர்களிடம் உதவி கமிஷனர் நிலவழகன் விசாரணை நடத்தினார். மேலும், இந்த முறைகேடு புகார் தொடர்பாக மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story