காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்த போது, வழி நெடுக பக்தர்கள் திரண்டு வந்து வணங்கினர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்த போது, வழி நெடுக பக்தர்கள் திரண்டு வந்து வணங்கினர். இது குறித்து இந்து சயாம அறநிலையத்துறை செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது: குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேரில் சில பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டன. இதனால் தேரோட்டம் நிறைவாக நடக்கும் முன்பு, ஒரு முறை வெள்ளோட்டம் விடப்படுவது வழக்கம். இதற்காக கோவில் வளாகத்திலிருந்து தேரின் கீழ் பாகம் மட்டும் வெள்ளோட்டம் விடப்பட்டது. எவ்வித அலங்காரமும், அம்மன் விக்ரகமும் இல்லாமல் தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர். வழிநெடுக பக்தர்கள் சாலையில் தண்ணீர் ஊற்றியும், மலர்கள் தூவியும் வழிபட்டனர். ராஜா சாலை, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, புத்தர் வீதி வழியாக கோவில் வளாகத்தில் நிறைவுற்றது. வழக்கமாக இந்த வீதிகளின் வழியாகத்தான் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story