சாக்கடையில் குழாய் அமைத்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக புகார்

X
சாயக்கழிவு நீர்
சாயப்பட்டறைலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை வழியாக குழாய் அமைத்து வெளியேற்றப்படுவதாக புகார் அளித்துள்ளது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் சுத்திகரிப்பு செய்யப்படாமல் சாயக்கழிவு நீர் அடிக்கடி காவிரி ஆற்றில் வெளியேற்றபடுகிறது. இதனால் காவேரி ஆறு மாசுபட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில சாயப்பட்டறைகள் தனியாக குழாய் அமைத்து, அதை சாக்கடை வழியே செல்லும் வகையில், குழாய் அமைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக புகார் அளித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
Next Story
