கழிவுநீர் வாய்க்கால் முறையாக அமைக்கவில்லை என புகார்

கழிவுநீர் வாய்க்கால் முறையாக அமைக்கவில்லை என புகார்

கழிவுநீர் வாய்க்கால்

திருக்கோவிலூர் பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் முறையாக அமைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை காவேரி சந்து எஸ் எம் ஷா தெருவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக அளவீடு செய்யாமல் புதிய தார் சாலை அமைத்து வடிகால் வாய்க்கால் அமைத்ததாக புகார் எழுந்துள்ளது. தனிநபர் பட்டா நிலத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்ததாக கூறி உரிமையாளர் வாய்க்கால் நடுவில் காணிக்கல்லை நட்டதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story