பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் -மகிளா காங்கிரஸ் சார்பில் ஆட்சியரிடம் புகார்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் -மகிளா காங்கிரஸ் சார்பில் ஆட்சியரிடம் புகார்

மனு அளிக்க வந்த மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் 

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்து விசாரணை நடத்த கோரி மதுரை மாநகர மகிளா காங்கிரஸ் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது,
கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளருமான ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3ஆயிரம் பாலியல் வீடியோக்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்து வெளிப்படையான விசாரணை நடத்த கோரியும் அதற்கு துணையாக இருந்தவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஷாநவாஸ்பேகம் தலைமையிலான மகிளா காங்கிரஸ் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Tags

Next Story