ஊராட்சி தலைவியின் பதவியை ரத்து செய்ய கலெக்டரிடம் புகார்
தர்மபுரம் ஊராட்சி தலைவியின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் ரெங்கநாயகி என்பவர் ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறார். கடந்த 2020 முதல் 2024 வரை அவரின் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊராட்சியில் 3.75 கோடி ரூபாய் ஊராட்சிக்கு நிதி இழப்பு ஊராட்சி தலைவி மூலம் ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி சட்ட விதி 205 - ன் படி இந்த ஊராட்சி தலைவியின் பதவியை ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் என்பவர் தலைமையில் இன்று மனு கொடுக்கப்பட்டது.