முதியவர் மாயம் மனைவி காவல் நிலையத்தில் புகார் !
விருதுநகர் பாண்டியன்நகர் பகுதியில் பாலமுரளி என்ற 52 வயது முதியவரை காணவில்லை அவருடைய மனைவி காவல் நிலையத்தில் புகார்.
விருதுநகர் பாண்டியன்நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலமுரளி வயது 52 இவர் மனைவி காலீஸ்வரி வயது 48 பாலமுரளி மரக்கடை வைத்து தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 16ஆம் தேதி காலை கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் தற்போது வரை வீடு திரும்பவில்லை. எனவும் அவருடைய மொபைல் எண்ணம் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறி அவருடைய மனைவி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story