கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களை அலைக்கழிப்பதாக புகார்
கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனர். பஸ், கார் மற்றும் வேன்களில் வரும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் சிலுவை நகர் வழியாக காட்சி கோபுரம் அருகே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு காமராஜர் மண்டபம் வழியாக முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால் தற்போது சிலுவை நகரில் இருந்து சன்செட் பாயிண்ட் பகுதிக்கு அய்யப்ப பக்தர் களின் வாகனங்களை போலீசார் அனுப்புவதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தால் மட்டுமே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சென்றடைய முடியும். அய்யப்ப பக்தர்களை வேண்டும் என்றே அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.