தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் - ஆட்சியர்

தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் - ஆட்சியர்

ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

தேர்தல் விதிமீறல்கள் குறித்து கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின் படி பாராளுமன்ற தேர்தல் 2024 நடைபெறுவது தொடர்பான தேர்தல் அட்டவணைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் 16.03.2024 மாலை 3.00 மணி அளவில் வெளியிடப்பட்டது. அதன்படி 19.04.20124 (வெள்ளிக் கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள 30 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 29நாகப்பட்டினம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் 163,நாகப்பட்டினம். 164.கீழ்வேளூர்(தனி) மற்றும் 165.வேதாரண்யம் ஆகிய 03 சட்டமன்ற தொகுதிகளும் திருவாரூர் மாவட்டத்தின் 166,திருத்துறைப்பூண்டி(தனி), 168 திருவாரூர். 169 நன்னிலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும் ஆக மொத்தம் 06 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 5,49,443 வாக்காளர்களும், இதில் 2,68,725, 2,80,694 24 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தேர்தல் பணியில் சுமார் 7500 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5769 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட 4430 வாக்காளர்கள் விருப்பத்தின அடிப்படையில் அஞ்சல் மூலம் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 7,89,016 வாக்காளர்களும், இதில் 3,86,125 ஆண் வாக்காளர்கள், 4,02,834 பெண் வாக்காளர்கள் மற்றும் 57 தோ வாக்காளர்கள் உள்ளனர். இத்தேர்தல் பணியில் 7500 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 7136 மாற்றுத்திறனாளி வாக்கார்கள் மற்று 85 வயதிற்கு மேற்பட்ட 6075 வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையின் அஞ்சள் மூலம் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது. மேற்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 651 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

அவற்றில் 49 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி கண்காணிக்கப்பட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் அரசு விளம்பரங்கள் அகற்றிடவும், அரசுக் கட்டிடங்கள், சாலை மேம்பாலங்கள், பொது இடங்களில் ஏற்கனயே எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைப்பதற்கும் அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை பாதுகாப்பான முறையில் 72 மணி நேரத்தில் அகற்றிட சம்மந்தப்பட்ட 1 அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் செல்லினங்களை கண்காணித்திடவும். தேர்தல் தொடர்பான புகார்களை உடனுக்குடன் திர்வு செய்திடவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 09 பறக்கும் குழுக்களும் 19 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 01 வீடியோ கண்காணிக்கும் குழு உள்ளிட்ட 19 குழுக்கள் GPS கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் தேர்தலை கண்காணித்திட அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகளின்படி ரூ.50000/- க்கும் மேற்பட்டு சரியான ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்கள் இருப்பின் மாவட்ட கூடுதல் ஆட்சியர், மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாணி (கணக்கு) ஆகியோர் அடங்கிய குழுவில் மேல்முறையீடு செய்து திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

விளம்பரங்கள், நாளிதழ்கள், வாட்ஸ்அப் மற்றும் அனைத்து தொலைக்காட்சிகளில் அனுமதி இன்றி வரும் விளம்பரங்கள் ஊட சான்றிதழ் மற்றும் காண்காணிப்பு குழுவால் கண்காணிக்கப்பட்டு தேர்தல் செலவினங்களில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்துத் தொகுதிகளிலும் கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் இயங்கும். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை நட்டணமில்லா தொலைபேசி எண் 18004257034 10g 04.365-252594, 04365-252595, 04365-252599 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 1950 என்ற இலவச எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story