தேர்தல் விதிமீறல் புகார்களை பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் - ஆட்சியர்

தேர்தல் விதிமீறல் புகார்களை பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் - ஆட்சியர்

ஆட்சியர் பழனி 

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் புகார்களை தேர்தல் பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சி.பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் மற்றும் விதிமீறல்களை கண்காணிக்க இந் திய தேர்தல் ஆணையத்தால் 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.

அதாவது தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் அகிலேஷ்குமார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திரசிங் குஞ்சியால், தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலாமாளிகையில் தங்கியுள்ளனர். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் மற்றும் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள், காலை 9 மணி முதல் 10 மணி வரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர் புகொண்டு தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்

. டாக்டர் அகிலேஷ்குமார் மிஷ்ராவை 9363750076, திரேந்திரசிங் குஞ் சியாலை 6374719619, ராகுல் சிங்கானியாவை 9363969020 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Tags

Read MoreRead Less
Next Story