கோவிலுக்கு நுழைந்த பட்டியலின மக்களை ஒதுக்கி வைப்பதாக புகார்
திருப்பூர் பொங்குபாளையம் பகுதியில் உள்ள கோவிலில் நுழைந்த பட்டியிலன மக்களை மாற்று சமூகத்தினர் சொந்த ஊருக்குள்ளேயே ஒதுக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது..
திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாற்று சமூகத்தினர் தஙக்ளை கோவிலுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என ஆட்சியரிடம் புகார் அளித்ததால் வருவாய் துறை கண்காணிப்பில் , காவல்துறை பாதுகப்பில் 10 குடும்பத்தார் பொங்கல் வைத்து ஆலய நுழைவு மேற்கொண்டனர் . இதனையடுத்து கோவிலுக்குள் நுழைந்த 10 குடும்பத்தாரையும் அதே சமுகத்தை சேர்ந்த மக்கள் தங்கள் ஊருக்குள்ளேயே ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். மேலும் வேலை செய்யும் இடங்களில் சொல்லி தங்களை வேலை விட்டு நிறுத்தி விட்டதாக தெரிவித்த அவர்கள் தங்களுக்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story