கல்வெட்டு தொடர்பான பயிற்சி முகாம் நிறைவு

கல்வெட்டு தொடர்பான பயிற்சி முகாம் நிறைவு

கல்வெட்டு தொடர்பான பயிற்சி முகாம் நிறைவு

சிவகங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வெட்டு தொடர்பான பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் கல்வி இடைப் பயிற்சித் திட்டம் மூலம் கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட கல்வெட்டு தொடா்பான ஒரு வார பயிற்சி முகாம் நிறைவடைந்தது. அருங்காட்சியகப் பணிகளில் ஒன்றாக கல்லூரி மாணவா்களுக்கு கல்வி இடைப் பயிற்சி வழங்குவது நடைமுறையில் உள்ளது. இதன்படி, சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் அவ்வப்போது கல்லூரி மாணவா்களுக்கு கல்வி இடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள் 30 பேருக்கு கல்வி இடைப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் பக்கிரிசாமி முன்னிலை வகித்தாா். சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனா் காளிராசா பங்கேற்று, கல்வெட்டு அமைப்பு முறை, கல்வெட்டு வாசிப்பு தொடங்கும் முறை, கல்வெட்டு செய்திகள், கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடா்பான வரிகள் போன்றவற்றை படக் காட்சிகளுடன் மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா்.

Tags

Next Story