கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி நிறைவு: நலத்திட்டங்களை வழங்கிய ஆட்சியர்

கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி நிறைவு: நலத்திட்டங்களை வழங்கிய ஆட்சியர்

கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி நிறைவு

கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி நிறைவு விழாவில் நலத்திட்டங்களை ஆட்சியர் வழங்கினார்.

ஜமாபந்தி வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு குறித்து நிகழ்வு மாவட்டம் முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வருவாய் தீர்வாயக் கணக்கு நிறைவு நாளில் ஏழு நாட்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருவாய் தீர்வாயம்- பச ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் .

வருவாய் தீர்வாயம் பசலி கணக்கு முடிப்பு நடைபெறும் நாட்களில் வருவாய் துறையினர் பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவைகளை குறித்த கணக்குகளை சரி பார்த்து இந்தாண்டு ஜமாபந்தி வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பானது 07.06.2024 தேதி அன்று தொடங்கப்பட்டு ஏழு நாட்கள் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் - பசலி (1433) நாட்களில் வழங்கப்பட்ட பட்டா மாற்றம் முழு புலம், பட்டா மாற்றம் உட்பிரிவு, வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகையும் மற்றும் விதவை உதவித் தொகையும், பட்டா மேல்முறையீடு குடும்ப அட்டை பிறப்பு, இறப்பு வாரிசு சான்றிதழ் என 757 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 106 மனுக்கள் தீர்வு காணப்பட்டது.

651 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. விரைவில் பரிசீலனையில் உள்ள அனைத்து மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்கள்.இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் திருமதி. ப்ரீத்தி தனி வட்டாட்சியர் (சபாதி) அருள்வளவன், ஆரோக்கியதாஸ், வட்டார வளர்ச்சிஅலுவலர் சந்திரசேகர், துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள்கிராம அலுவலக உதவியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story