பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி நிறைவு

பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி நிறைவு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சேதமடைந்த பகுதியில் சீரமைப்பு பணி நிறைவடைந்தது.


மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சேதமடைந்த பகுதியில் சீரமைப்பு பணி நிறைவடைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த் தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை சீரமைப்ப தற்காக குழித்துறை தாமி ரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தைதொட்டு மேம்பா லம் தொடங்கி பம்மம் வரை 2.5 கி.மி தூரம் அமைக்கப் பட்டது.கடந்தசில தினங்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பம் மம் பகுதியில் திடீரென மேம் பாலம் நடுப்பகுதி உடைந் தது. இதனால் மேம்பாலம் வழியாக போக்குவரத்து முழுமையாக நிறுத்தப் பட்டது.லாரிகள் பயணம், திக்குறிச்சி வழியாக திருப்பிவிடப்பட்டது. பஸ்கள் மேம்பா லத்தின் கீழ் பகுதி வழியாக இயக்கப்படுகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் சேதமடைந்த பால பகுதியை பார்வையிட்டு பாலம் சேதம் அடைந்ததில் சதி நடந்து உள்ளது என்றும் சம்பந்த பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகூறிய தோடு பாலசீரமைப்பு பணிகளை நிறுத்தினார்.தொடர்ந்து அதிகாரி கள் பாலத்தை ஆய்வு செய்த பிறகு சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மேம் பாலத்தில் பழுதடைந்த பகுதியில் 4வது நாளாக நேற்றும் சீரமைப்பு பணி நெடுஞ்சாலை துறை அதி காரிகள் முன்னிலையில் நடந்தது.இந்த பகுதியில் எளிதில் உலரக்கூடிய, அதாவது இறுக கூடிய வேதியியல் கலவை கான்கிரீட் உடன் சேர்க்கப்பட்டு தகடு ஜாக்கி மூலம் உயர்த்தப்பட்டு சீர மைப்பு பணி நடந்தது. மீண்டும் கான்கிரீட்போடப்பட் டது. சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ள தால் ஒரு சில நாட்களில் இந்த பாலத்தில் போக்கு வரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story