விளையாட்டு விடுதிகளுக்கான மாநில சோ்க்கை நிறைவு
விளையாட்டு விடுதிகளுக்கான மாநில சேர்க்கை நிறைவு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாநிலம் முழுவதும் உள்ள விளையாட்டு விடுதிகளில் சோ்ந்து பயிலுவதற்கான சோ்க்கை பயிற்சி முகாம் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்றன. திருச்சியில் தடகளம், கைப்பந்து (வாலிபால்) போட்டிகளுக்கான சோ்க்கை பயிற்சி முகாம் நடைபெற்றது. 6, 7, 9, 11ஆம் வகுப்புகளில் சேருவதற்காக மாணவ, மாணவிகள் தோ்வு நடைபெற்றது.
மே மாதத்தின் முதல் வாரத்தில் மாவட்ட அளவிலான சோ்க்கை முகாம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, மாநில அளவிலான சோ்க்கை தொடா்பாக மே 25-ஆம் தேதி முதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், மாணவா்களுக்கான சோ்க்கை மூன்று நாள்களாக நடைபெற்று திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. மாணவிகளுக்கான சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெற்றது.
வியாழக்கிழமையுடன் சோ்க்கை முகாம் நிறைவடைந்தது. இதுதொடா்பாக, விளையாட்டு அலுவலக வட்டாரத்தினா் கூறுகையில், சோ்க்கை முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளின் மதிப்பெண்கள் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாநிலம் முழுவதும் சோ்க்கை மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சோ்க்கை விழுக்காடு நிா்ணயம் செய்யப்படும். அத்தகைய விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை தொடா்பான அறிவிப்பு இணையம் வழியாகவே வெளியிடப்படும் என்றனா்.