மார்கழி மாத திருவிளக்கு பூஜை நிறைவு

X
திருவிளக்கு பூஜை
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மார்கழி ஒன்றாம் தேதி முதல் திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது. அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து நாள்தோறும் மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நிறைவு விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
Next Story
