லால்குடியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு

லால்குடியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு

திருச்சி மாவட்டம் லால்குடியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் மக்கும் குப்பைகளை தரம் பிரித்து நவீன இயந்திரம் மூலம் உரமாக்கும் திட்ட தொடக்க விழா நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் மக்கும் குப்பைகளை தரம் பிரித்து நவீன இயந்திரம் மூலம் உரமாக்கும் திட்ட தொடக்க விழா நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி கமிஷனர் குமார், துணைத் தலைவர் சுகுணா, நகராட்சி பொறி யாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். லால்குடி நகராட்சிக் குட்பட்ட 24 வார்டுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை, பூவாளூர் சாலையில் உள்ள நகராட் சிக்கு சொந்தமான உர பூங்காவுக்கு கொண்டு சென்று, அதை தரம் பிரித்து நவீன அரவை இயந்திரம் மூலம் அரைத்து, பசுமை தொட் டியில் 30 நாட்கள் வைத்து உரமாக மாற்றப்படும்.இந்த உரத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்று நகராட்சி ஆணையர் குமார் தெரிவித் தார்.முடிவில் துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Tags

Next Story