நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி - மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் !

நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி - மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் !

நாய்

நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: ரேபிஸ் நோய் தாக்கம், நோயின் அறிகுறிகள் தடுப்பு நடவடிக்கை, அதிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளுதல், நாய் கடித்தாலோ அல்லது நக்கினாலோ உடனடியாக அந்த இடத்தை நீர் மற்றும் சோப்பினை கொண்டு நன்றாக சுத்தம் செய்தல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனை சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் தொடர்ந்து, 3ம் நாள், 7ம் நாள், 28ம் நாள் ஆகிய நாட்களில் முறையாக மொத்தம் 4தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளுதல் ஆகியன குறித்து பொதுமக்கள் முறையாக அறிந்து கொள்ள வேண்டும். இத்தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்தது என்று அலட்சியமாக இருத்தல் கூடாது. நாய் வளர்ப்பவர்கள் பிறந்த 3மாதத்தில் தங்களது நாய்களுக்கு கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும். பிறகு முறையாக கால்நடை மருத்துவரை அணுகி, அவ்வப்போது தடுப்பூசிகள் போட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story