கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி
தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் 1272 காவல் துறையினருக்கு, கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் 1272 காவல் துறையினருக்கு, கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் 1272 காவல் துறையினருக்கு, கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த பணிக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். மத்திய தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரபுலிங் காவலிகட்டி முன்னி வகித்தாா். இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் பூங்கொடி தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 18.77 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் 1272 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 2121 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிக்காக 137 சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், 825 தலைமைக் காவலா்கள், 310 காவலா்கள் என 1272 காவல்துறையினருக்கு கணினி மூலமாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Next Story