நீதிமன்றத்தில் சமரச தினம் - மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு 

நீதிமன்றத்தில் சமரச தினம் - மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு 

 சமரச தினம்

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் சமரச தின வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் சமரச தின வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆஷா கௌசல்யா சாந்தினி, முதன்மை சார்பு நீதிபதி முருகன், கூடுதல் சார்பு நீதிபதி அசன் முகமது, சிறப்பு வன வழக்கு நீதிபதி சிவசக்தி, உரிமை இயல் நீதிபதி சுந்தர காமேஷ் மார்த்தாண்டன், குற்றவியல் நீதிபதி மணிமேகலா வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலஜனாதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சமரச மையம் செயல்படுகிறது. குழித்துறை, பத்மநாபபுரம், . இரணியல் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் துணை சமரச மையங்கள் செயல்படுகின்றன. வழக்குகளில் சமரசம் செய்து கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் வழங்கினார்.

சமரச தீர்வு மையம் மூலம் அதிக பணம் செலவு இல்லாமல் வழக்கில் தீர்வு காணலாம் எனவும், சமரச மையத்தில் நடக்கும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Tags

Next Story