ஆங்கில அறிவுசார் இலக்கிய மன்றத்தின் நிறைவு விழா

ஆங்கில அறிவுசார் இலக்கிய மன்றத்தின் நிறைவு விழா

திருச்செங்கோடில் ஆங்கில அறிவுசார் இலக்கிய மன்றத்தின் நிறைவு விழா நடைபெற்றது.



திருச்செங்கோடில் ஆங்கில அறிவுசார் இலக்கிய மன்றத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில அறிவுசார் இலக்கிய மன்றத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ப பிரேம்குமார் பங்கு பெற்று மாணவர்களுக்கு சிறப்பான கருத்துக்களை வழங்கினார். இவ்விழாவிற்கு திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலரும் ஆகிய மு ரமணி காந்தன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கி வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். ஆங்கில இலக்கிய அறிவுசார் மையத்தின் ஆண்டு அறிக்கையை ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் எ திருமலை ராஜா வழங்கினார். சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையினை ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ப சரவணன் வழங்கினார். இந்நிகழ்விற்கு வாழ்த்துரையை கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் முனைவர் செ பிரேமா வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் நா பூர்ணிமா வழங்கினார்கள்.

ஆர்ட் விஸ்டா 2024 (ART-VISTA 2024)என்ற தலைப்பின் வழியாக மாணவ மாணவிகளுக்கு நான்கு வகையான ஆங்கில இலக்கிய அறிவு சார் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் பரிசாக வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சியோடு விழா நிறைவுற்றது. இந்நிகழ்விற்கான வரவேற்புரையினை முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி பி. ஸ்ரீஜா வழங்கினார் நன்றியுரையை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி என். தீபதர்ஷினி வழங்கினார்.இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள், உதவிப்பேராசிரியர்கள், மாணவ,மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story