பல்லடத்தில் என்மண் என்மக்கள் யாத்திரை நிறைவுவிழா: பிரதமர் பங்கேற்பு

பல்லடத்தில்  என்மண் என்மக்கள் யாத்திரை நிறைவுவிழா: பிரதமர் பங்கேற்பு

கருப்பு முருகான ஆனந்தம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு வருகின்ற 27 ஆம் தேதி மதியம் நடைபெற உள்ளது. ஏற்கனவே இருவேறு தேதிகள் தெரிவிக்கப்பட்டு அவை மாற்றம் அடைந்துள்ள நிலையில் நேற்று இரவு தேதி உறுதி செய்யப்பட்டதாக இன்று திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ பி முருகானந்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 27ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது பிரதமர் கலந்து கொள்ள உள்ள மாநாட்டிற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 20 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என்பதால் அனைவருக்குமான பார்க்கிங் வசதி , மதிய உணவு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் பல்லடத்தில் பிரதமர் கலந்து கொள்கின்ற தேதி ஏற்கனவே 25ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் பிரதமருக்கு மிகவும் பிடித்த மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேச வேண்டி இருந்ததால் தேதி மாற்றப்பட்டு இருப்பதாகவும், மனதின் குரல் நிகழ்ச்சியை குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கேட்டு வருவதாகவும் ,

பாஜக ஆளும் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதில் மூன்றாவது இடத்தில் இடம் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தார். பல்லடத்தில் நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்ற போது வெறும் அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்விக்கு பாஜக நரேந்திர மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுக்கு எப்போதோ வரவேற்பு அளித்து விட்டதாகவும் ,

ஆனால் எதிர் தரப்பில் INDIA என்ற கூட்டணி தற்போது ஒவ்வொரு எழுத்துக்களாக இழந்து வருவதாகவும், கடைசியாக ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லா INDIA கூட்டணி மீது நம்பிக்கை இல்லாததால் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதாகவும் தமிழகம் மட்டுமே INDIA கூட்டணியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும் மூழ்கக் கூடிய கப்பலாக அதுவும் எப்போது கரை தட்டி நிற்கும் என தெரியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story