கரூர் கிராமம் பகுதியில் 7 நாளிலேயே கான்கிரீட் தரை சேதம்

கரூர் கிராமம் பகுதியில் 7 நாளிலேயே கான்கிரீட் தரை சேதம்

சேதமடைந்த தரை

கரூர் கிராமம் சாலை குறுக்கே சிறுபாலம் கட்டுமான பணிகள் நிறைவு செய்தும், வாகன ஓட்டிகள் மாற்று வழியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கரூர் கிராமம் வழியாக, முத்தியால்பேட்டை செல்லும் பிரதான புறவழி சாலை உள்ளது. இச்சாலை குறுக்கே, சேக்கான்குளம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் குறுக்கே, 5 லட்சம் ரூபாய் செலவில் சிறுபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் இருபுறமும், தார் சாலை இணைக்கும் வகையில், கான்கிரீட் தரைப் போட்டனர். ஒரு வாரத்திலேயே, கான்கிரீட் தரை யில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

சாலை குறுக்கே சிறுபாலம் கட்டுமான பணிகள் நிறைவு செய்தும், வாகன ஓட்டிகள் மாற்று வழியாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சேக்கான்குளம் ஏரி நீர்வரத்து கால்வாய் சிறுபாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story