மது அருந்தியதை கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாடகை வீட்டில் வசிப்பவர் நராயண பெருமாள் (34). நெல்லை மாவட்டம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக குளச்சல் பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார்.இவரது தம்பி முத்துப்பாண்டி (23) என்பவரும் நாராயண பெருமாள் வீட்டில் தங்கி அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி இரவு முத்துப்பாண்டி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதை நாராயண பெருமாள் கண்டித்து, இனி தன் சலூனுக்கு வேலைக்கு வர வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த முத்துப்பாண்டி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை நாராயண பெருமாள் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.