பாக்கியை தராத நடத்துனர் - அபராதம் விதித்த நீதிமன்றம்

பாக்கியை தராத நடத்துனர் - அபராதம் விதித்த  நீதிமன்றம்

நுகர்வோர் நீதிமன்றம் 

அரசு பேருந்தில் பயணிக்கு சில்லறை பாக்கி தராத நடத்துனருக்கு ரூ.5000 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி அரசு பேருந்தில் ஜெயபாரதி என்பவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது நடத்துனர் பயணச்சீட்டை கொடுத்து 22 ரூபாய் கேட்ட நிலையில், அவர் 100 ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் கூடுதலாக 2 ரூபாய் சில்லறையாகவும் கொடுத்துள்ளார். சில்லறை இல்லையா என பயணியை தகாத வார்த்தையால் பேசி பின்பு இறங்கும் போது மீதி 80 ரூபாயை கொடுக்கவில்லை என ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஜெயபாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி நாகர்கோவில் மண்டலத்திற்கு உட்பட்ட நடத்துனர் எட்வின் மற்றும் மண்டல மேலாளர் ஆகியோர் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ புகார்தாரருக்கு திரும்ப தராத மீதி தொகையான 80 ரூபாயை திருப்பி தர வேண்டும் எனவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 5000 ரூபாயும், வழக்கு செலவு தொகை 3000 ரூபாயும் வழங்க வேண்டும் என நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Tags

Next Story