மிட்டாய் வியாபாரி மர்ம மரணம்

மிட்டாய் வியாபாரி மர்ம மரணம்
மர்ம மரணம் 
கன்னியாகுமரி மாவட்டம்,சுசீந்திரம் அருகே மிட்டாய் வியாபாரி மர்ம மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கற்காடு ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் அன்னதங்கம் மகன் பாண்டியராஜன் (33). திருவிழா, பண்டிகை காலங்களில் ஊர் ஊராக சென்று மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். பாண்டியராஜனுக்கு கடந்த நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி இரண்டு வருடம் முன் பிரிந்து சென்று விட்டார். இதனால் பாண்டியராஜன் குடிப்பழத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் அன்னத் தங்கம் சமீபத்தில் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் பாண்டியராஜன் மட்டும் தனியாக இருந்துள்ளார். நேற்று வேலைக்கு பாண்டியராஜன் செல்லவில்லை. இதனால் அவருடன் செல்லும் சக தொழிலாளி வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது பாண்டியராஜன் சுய நினைவின்றி கிடந்துள்ளார். அருகில் மது பாட்டில்களும் கிடந்தது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது டாக்டர்கள் பாண்டியராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story