மாநாட்டு தீர்மான விளக்கம் பொதுக்கூட்டம்: அமைச்சர் அறிக்கை
பொதுக்கூட்ட பட்டியல்
திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை : தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் கடந்த 21.01.2024 அன்று சேலத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை பொதுமக்களிடம் விளக்கி இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்திட மாநில இளைஞரணிச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் முதல் கட்டமாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் இளைஞரணி தீர்மான விளக்கம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களாக நடைபெற உள்ளது. இக்கூட்டங்களை சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பேருர்க்கழக இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செய்திடவும் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பேருர்க்கழக செயலாளர்கள் ஒத்துழைப்பு நல்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.