தொண்டியில் அழுகிய மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

தொண்டியில் அழுகிய மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

மீன் மார்க்கெட்டில் ஆய்வு 

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜயகுமார் ,மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் கோபிநாத் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், மீன்வள ஆய்வாளர் அபுதாஹீர். மீன்வள சார் ஆய்வாளர் அய்யனார், மேற்பார்வையாளர்கள் கணேஷ்குமார், முருகேசன, நடேஷ் பிரபு ஆகியோர் தொண்டியில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அனைத்து கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மீன்களில் ரசாயன பொருள் சேர்க்கப்பட்டதா என பரிசோதனை செய்ததில் ரசாயன பொருள் கலப்படம் செய்யப்படவில்லை என பரிசோதனையில் அறியப்பட்டது. அழுகிப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. அழுகிப்போன மீன்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Tags

Next Story