முட்புதரில் பதுக்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !

முட்புதரில் பதுக்கிய  ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !

 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

விழுப்புரம் அருகே முட்புதரில் பதுக்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகள், விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.
விழுப்புரம்அருகே அத்தியூர்திருக்கை பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை அத்தியூர் திருக்கை கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள சிவன் கோவில் அருகில் ஒருவர், சாக்கு மூட்டையை தூக்கிக்கொண்டு நடந்து சென்றார். அவரை போலீசார் பின்தொடர்ந்து சென்றபோது அந்த நபர் ஒரு மறைவான இடத்தில் முட்புதருக்குள் அந்த சாக்கு மூட்டையை வைத்தார். பின்னர் அந்த நபரை மடக்கிப்பிடித்த போலீசார், அங்குள்ள இடத்தில் சோதனை செய்தபோது அங்கு 30 கிலோ எடை கொண்ட 30 சாக்கு மூட்டை களில் 1,200 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட் டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, உடனே அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள பன்னாவரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பன் மகன் ஏகாம்பரம் (வயது 36) என்பதும், இவர் திருக்கோவிலூர் பகுதியில் வாத்து பண்ணை வைத்து நடத்தி வருவதும், அங்குள்ள பண்ணையில் உள்ள வாத்துகளுக்கு தீவனத்திற்காக அவர் அரியலூர், அத்தியூர் திருக்கை, கக்கனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை மொத்தமாக ஒரு இடத்தில் பதுக்கி வைத்து தன்னுடைய வாத்து பண்ணைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது, இதையடுத்து ஏகாம்பரத்தை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகள், விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story