உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட உடைகள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட உடைகள் பறிமுதல்
பெரம்பலூர் - துறையூர் சாலையில் அடைக்கம்பட்டி கிராம பகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த கண்டைனர் லாரியை வழிமறித்து சோதனை செய்ததில், லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 298 எண்ணிக்கையிலான சேலைகள், 382 எண்ணிக்கையிலான டி-ஷர்ட் மற்றும் பேண்ட்கள் உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பெரம்பலூர் சப் -கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கண்டைனர் லாரி ஓட்டுநர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ராஜா வயது -35, என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட உடைகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 600 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.