அரசியல் கட்சியினரிமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுபாட்டில்கள் பறிமுதல்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 மதுபானக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மது மற்றும் பீர் வகைகளை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. டாஸ்மாக் விதிகளின் கீழ் பிற்பகல், 12:00 மணி முதல், இரவு 10:00 மணி வரையில், மதுக்கூடங்கள் செயல்பட வேண்டும். விதிமீறினால், மது விலக்கு அமலாக்க பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். மது கடைகளில், நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என, காஞ்சிபுரம் டாஸ்மாக் தெற்கு மாவட்ட மேலாளர் கேசவன் தெரிவித்து இருந்தார்.
காஞ்சிபுரம் கலால் பிரிவு தாசில்தார் ராஜேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர் சரவணன் பறக்கும் படை குழவினர் நேற்று, கோனேரிகுப்பம் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ஆய்வு செய்தனர். இதில், 58 மது பாட்டில்களை அரசியல் கட்சியினரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.