பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்

திருப்பூரில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகரில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் தொடர்ச்சியாக அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்கள் பயன்படுத்தக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி உத்தரவின் பேரில் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில் ராம் மற்றும் விஜயா ஆகியோர் பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவைவிட அதிக ஒலி எழுப்பக்கூடிய பெயர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story