உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்

உரிய  ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 6 லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 6 லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 6லட்சத்து 11 ஆயிரத்து 600ரூபாய் பறிமுதல்! தேர்தல் நிலையான தணிக்கை குழுவினர் பறிமுதல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலையான தணிக்கை குழுவினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் கரூர் பகுதியைச் சார்ந்த ‌ மணிவேல் என்பவர் பெயிண்ட் டிஸ்ட்ரிபியூட்டராக உள்ளார்.

இவர் திருப்பத்தூருக்கு வரும்பொழுது இராஜாவூர் பகுதியில் தேர்தல் நிலையான தணிக்கை குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் மணிவேல் கொண்டு வந்த 4,20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல் கரியம்பட்டி பகுதியில் வினோத் குமார் என்பவரிடமிருந்து 95ஆயிரத்தி100 ரூபாய் மற்றும் விஷமங்கலம் பகுதியில் சக்திவேல் என்பவரிடமிருந்து 96 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தேர்தல் நிலையான தணிக்கை குழுவினர் கைபற்றினர் மேலும் கைப்பற்றப்பட்ட மொத்த பணமான 6 லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாயை பணத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனந்தகிருஷ்ணனிடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.அதன் பின்பு சார்நிலை கருவூலத்தில் மொத்த பணத்தையும் ஒப்படைத்தனர்.

Tags

Next Story