உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்!

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம்  பறிமுதல்!

கோவையில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவையில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை:கடந்த 18 ஆம் தேதி மாலை ஈரோட்டைச் சேர்ந்த தமிழரசு என்பவரது மகன் பவித்ரன்(28)மற்றும் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மகன் சங்கர்(25) ஆகியோர் தனியார் வங்கி ஏடிஎம்மில் பணத்தை வைக்க உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததால் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் அவர்களின் தலைமையிலான குழுவினர் 4,02,200 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள துணைத் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.இன்று காலை கோவை பீளமேட்டைச் சேர்ந்த சஜித் மதராஸ் வாலா என்பவரது மகன் சபீர் மதராஸ் வாலா (44)உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூபாய் 3 லட்சத்தை கணியூர் டோல்கேட்டில் வைத்து பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள துணை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story