உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்
பணம் பறிமுதல்
செய்யாறு சாலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மாமண்டூர் - செய்யாறு சாலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர் . சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 72 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர்.
Next Story