உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.3.63லட்சம் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை மற்றும் எஸ் எஸ் டி குழுவினர் மூன்று பிரிவுகளாக பிரிந்து 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி இன்று ராமாபுரம் பகுதியில் கௌதமன் தலைமையிலான பறக்கும் படை குழு ஒன்றுவாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் அசோக் லேலண்ட்நான்கு சக்கர வண்டியில் வந்தபோது நிறுத்தி சோதனை இட்டபோதுஉரிய ஆவணங்கள் இன்றி ரூ ஒரு லட்சத்து73 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் யூனிகான் இருசக்கர வாகனத்தில் வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை நிறுத்திசோதனை செய்த போது ரூ 52 ஆயிரம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல்ஜோதிமணி என்பவர் தலைமையிலான எஸ் எஸ் டி டீம் ஏ கே எஸ் ஆர் கல்வி நிறுவனம் அருகில் சேலத்தில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை ஈடுபட்டபோது திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ ஒரு லட்சத்து 38 ஆயிரத்தைவைத்திருந்ததை தெரிய வந்தது அவரிடமிருந்து,
அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இரண்டு குழுவினர்களும் பறிமுதல் செய்த ரூ மூன்று லட்சத்து 63 ஆயிரம் ரொக்க பணம்திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியகம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகமான சுகந்தி வசம் ஒப்படைக்கப்பட்டது.
பணத்தை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி திருச்செங்கோடு அரசு கருவூலத்தில் பணத்தை ஒப்படைக்கவும் உரிய ஆவணங்களை காட்டினால் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
