அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள் இடையே மோதல் !

நத்தம் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பஸ் நிலையத்ததில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல்வேறு வழிதடங்களுக்கு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை பணிமலையில் இருந்து புதுக்கோட்டை-திண்டுக்கல் நோக்கி செல்லும் நத்தத்தில் வந்தது. அப்போது அதை நத்தம் பணிமனையில் இருந்து நத்தத்திலிருந்து- திருப்பூருக்கு செல்ல வேண்டிய பேருந்தை எடுக்காமல் நின்று கொண்டிருந்தது. இதனால் புதுக்கோட்டையில் இருந்த வந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் - திருப்பூர் செல்ல கிளம்பிய அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பி ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். இதனால் இரண்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

Tags

Next Story