கோவில் திருவிழா ஆடல்- பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்

கோவில் திருவிழா ஆடல்- பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்

இருதரப்பினர் மோதல்

சேர்பாடி கோவில் திருவிழா ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒடுகத்தூரை அடுத்த சேர்பாடி கிராமத்தில் பெரிய சேர்பாடி, சின்ன சேர்பாடி கிராம மக்கள் இணைந்து கொடமாத்தம்மன் கோவில் திருவிழாவை நடத்தினர். விழாவையொட்டி ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது சின்ன சேர்பாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் சின்ன சேர்பாடியை சேர்ந்தவர்களை சேர்க்கக்கூடாது என ஒரு தரப்பினர் பேசியதாகவும், அதை மீறி சின்ன சேர்பாடி இளைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இருதரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் சரமரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் நடன நிகழ்ச்சி மேடை மீது ஏறி சண்டை போட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேப்பங்குப்பம் போலீசார் அவர்களை சமரசம் செய்ய முயன்றனர்.

ஆனால் அவர்கள் ஆங்காங்கே குழுவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முறையான பாதுகாப்புடன் கலை நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story