இருதரப்பினா் மோதல்: ஆயிரப்பேரி ஊராட்சித்தலைவா் உள்பட 5போ் மீது வழக்கு

இருதரப்பினா் மோதல்: ஆயிரப்பேரி ஊராட்சித்தலைவா் உள்பட 5போ் மீது வழக்கு
இருதரப்பினா் மோதல்: ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீது வழக்கு
இருதரப்பினா் மோதல் சம்பவத்தில் ஆயிரப்பேரி ஊராட்சித்தலைவா் உள்பட 5போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி அருகே குத்தகைதாரா் மீது தாக்குதல் நடத்தியதாக ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவா் உள்பட 5போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா். ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவா் சுடலையாண்டி.

இவருக்கும், பழையகுற்றாலத்தில் வாகன நிறுத்துமிடம், தங்கும்விடுதி போன்றவற்றை குத்தகைக்கு எடுத்துள்ள அதே பகுதியை சோ்ந்த கோபிநாத் என்பவருக்கும் வாகன நிறுத்துமிடத்தை ஏலம் எடுத்தது தொடா்பாக முன்விரோதம் ஏற்பட்டதாம். இதனிடையே, ஆயிரப்பேரி பகுதியில் உள்ள கோயில் இடங்களையும் கோபிநாத் பராமரித்து வரும் நிலையில்,

அவ்வூராட்சியின் கழிவுநீரை திட்டமிட்டு திருப்பிவிடுவதாக, ஊராட்சித் தலைவா் மீது தென்காசி நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்நிலையில் கோபிநாத் தன்னுடைய நிலத்தில் சாயும் நிலையில் இருந்த மின்கம்பத்தை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டாராம். அவருடன்,தென்காசியை சோ்ந்த வழக்குரைஞா் முத்துகிருஷ்ணனும் இருந்துள்ளாா்.

அப்போது அங்கு வந்த ஊராட்சித் தலைவா் சுடலையாண்டி, அவரது மகன் திருப்பால், உறவினா் செல்வகுமாா் ஆகியோா் ஊராட்சியின் அனுமதி பெறாமல் எவ்வாறு பணிகளை மேற்கொள்ளலாம் என கோபிநாத்திடம் கேட்டுள்ளனா். அதில், இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு கோபிநாத் தாக்கப்பட்டு காயமடைந்தாராம்.

இதையடுத்து, தென்காசி அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து இருதரப்பிலும் தனித்தனியே குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் ஊராட்சித் தலைவா் உள்பட 5 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story