நிலப்பிரச்சனையில் மோதல் - மருத்துவமனையிலும் தொடர்ந்த மோதலால் பரபரப்பு

தேன்கனிக்கோட்டை அருகே நிலப்பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சென்ற அரசு மருத்துவமனையில் மீண்டும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் சுல்தான் பேட்டை பகுதியை சேர்ந்த ஜான் பாஷா (54) சையத் பாஷா (55) ஆகியோருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலிமுல்லா (45) அப்துல் சாயல் (65) ஆகியோருக்கும் இடையே பேளூர் என்ற இடத்தில் நிலப்பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

இதில் காயமடைந்தவர்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அங்கும் இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களோடு உடன் வந்தவர்களும் மோதிக்கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Tags

Next Story